இந்த விஷயத்தில் தைரியம் இருந்தால்!! சானியா மிர்சாவுடன் வெளியாகும் கிசுகிசு - வாய் திறந்த ஷமி
இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமணம் செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
முகமது ஷமி
இந்தியா வேகப்பந்துவீச்சாளர்களில் தற்போது முக்கியமான இடத்தில் இருப்பவர் முகமது ஷமி. காயம் காரணமாக தற்போது அணியில் விலகியிருக்கும் அவர், தொடர்ந்து காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்.
விவாகரத்தானது ஷமிக்கு பெறும் பின்னைடாவாக அமைந்தது என்றும் கூறலாம். அவரை அதனை கடந்து வரும் நிலையில், அவர் குறித்த தற்போது மற்றுமொரு சலசலப்பான கருத்து வெளிவந்துள்ளது.
சானியா மிர்சா
இந்திய டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவானாக திகழ்கிறார் சானியா மிர்சா. விளையாட்டில் பெரிய உச்சங்களை தொட்டவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2018-ஆம் ஆண்டு ஆன் குழந்தை ஒன்றும் பிறந்தது. திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து இவர்கள் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன. மாலில் மற்றுமொரு திருமணமும் தற்போது செய்து கொண்டுள்ளார்.
தைரியம் இருந்தால்...
இந்த சூழலில் தான், ஷமி மற்றும் சானியா மிர்சா திருமணம் செய்யவுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து வண்ணம் உள்ளன. இது தொடர்பாக பேசாமல் இருந்த ஷமி, தற்போது காட்டமாக பதிலளித்துள்ளார்.
அவர் பேசும் போது, இது வேடிக்கைகளுக்காக வேண்டுமென்றே செய்யப்படுகிறது. ஆனால் என்ன செய்ய முடியும்? நான் போனை எடுத்தாலே அந்த மீம்ஸ்களை தான் பார்க்க முடிகிறது. ஆனால் அவை வேடிக்கைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை என்பதை நான் கூற விரும்புகிறேன். மீம்ஸ் ஒருவரது வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருந்தால், அதைப் பற்றி சிந்தித்துப் பிறகு அதைப் பகிர வேண்டும்.
இந்த நபர்கள் முறையற்ற UnVerified பக்கங்களில் இருந்து பகிர்ந்து தப்பிக்கிறார்கள். ஆனால், நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் - இவை அனைத்தையும் சரிபார்க்கப்பட்ட பக்கத்திலிருந்து சொல்ல உங்களுக்கு தைரியம் இருந்தால், நான் பதிலளிப்பேன். வெற்றியை அடைய முயற்சி செய்யுங்கள், மக்களுக்கு உதவுங்கள் மற்றும் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள் அப்போது நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்று நான் நம்புகிறேன் என பேசினார்.

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
