இருவருக்கும் விவாகரத்து...முகமது ஷமியை மணக்கும் சானியா மிர்சா? தந்தை தகவல்
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மணக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
முகமது ஷமி
இந்தியா வேகப்பந்துவீச்சாளர்களில் தற்போது முக்கியமான இடத்தில் இருப்பவர் முகமது ஷமி. காயம் காரணமாக தற்போது அணியில் விலகியிருக்கும் அவர், தொடர்ந்து காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்.
விவாகரத்தானது ஷமிக்கு பெறும் பின்னைடாவாக அமைந்தது என்றும் கூறலாம். அவரை அதனை கடந்து வரும் நிலையில், அவர் குறித்த தற்போது மற்றுமொரு சலசலப்பான கருத்து வெளிவந்துள்ளது.
திருமணம்
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் கணவனை பிரிந்துள்ள நிலையில், சானியா மிர்சாவிற்கும் முகமது ஷமிக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றது.
அது தொடர்பாக சானியா மிர்சாவின் தந்தை கூறுகையில், ந்த வதந்திகள் சுத்த முட்டாள்தனமானது. சானியா மிர்சா இது வரை முகமது ஷமியை நேரில் கூட பார்த்ததே இல்லை" என்று தெரிவித்துள்ளார்.