இரண்டாவது திருமணம்? பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் - மௌனம் களைத்த முகமது ஷமி!
சானியா மிர்சா திருமணம் செய்ய இருப்பதாக வந்த வதந்திகளுக்கு ஷமி பதிலளித்துள்ளார்.
திருமணம்?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி அசத்தினார். தற்போது காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். விரைவில் காயத்தில் இருந்து மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, சில நாட்களாகவே முகமது ஷமிக்கும் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கும் திருமணம் என பல வதந்திகள் பரவியது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டு தீபோல் பரவ தொடங்கியது. இந்த நிலையில், முகமது ஷமி இது குறித்து மௌனம் களைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, சமூக ஊடகங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ளவும். இது போன்ற ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இது வித்தியாசமானது.சிலர் வேடிக்கைக்காக வேண்டுமென்றே இப்படி செய்கின்றனர்.
முகமது ஷமி
அதற்கு நான் என்ன செய்ய முடியும்? கைபேசியை திறந்தால் இது போன்ற மீம்ஸ்களைத்தான் பார்க்க முடிகிறது. னவே அந்த மீம்ஸ்கள் வேடிக்கையாக உருவாக்கப்பட்டவை என்று மட்டுமே நான் கூற விரும்புகிறேன். ஆனால் அது ஒருவரின் வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருப்பதால் நீங்கள் அதைப் பற்றி சிந்தித்து பகிர வேண்டும்.
அந்த நபர்கள் இது போன்ற செய்திகளை அதிகாரபூர்வமற்ற பக்கங்களில் வெளியிட்டு தப்பிக்கிறார்கள். ஆனால் உண்மையாக உங்களுக்கு தைரியம் இருந்தால் அதிகாரபூர்வ பக்கத்தில் அதை சொல்லுங்கள்.
நான் பதிலளிக்கிறேன். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு வெற்றியடைய முயற்சி செய்யுங்கள்.மக்களுக்கு உதவுங்கள். உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்று நான் நம்புகிறேன்" என கூறினார்.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
