முகமது ஷமியை திருமணம் செய்யும் சானியா மிர்சா? தந்தை கொடுத்த அப்டேட்!

Mohammed Shami Sania Mirza
By Sumathi Jun 22, 2024 06:42 AM GMT
Report

முகமது ஷமி மற்றும் சானியா மிர்சா திருமணம் செய்து கொண்டதாக புகைப்படம் பரவி வருகிறது.

முகமது ஷமி-சானியா மிர்சா

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவரது மனைவியை பிரிந்து வசித்து வருகிறார். அவரது மனைவி அவர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளார். தற்போது ஷமி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

mohammed shami - sania mirza

இதேபோல், சானியா மிர்சா தனது கணவர் சோயப் மாலிக்கை விவாகரத்து செய்தார். சோயப் மாலிக் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரலானது.

சானியா மிர்சாவுடன் விவாகரத்து - முதன் முறையாக மனம் திறந்த ஷொயிப் மாலிக்

சானியா மிர்சாவுடன் விவாகரத்து - முதன் முறையாக மனம் திறந்த ஷொயிப் மாலிக்

 திருமணம்? 

இருவரும் திருமணம் செய்து கொண்டதாக எண்ணி பலரும் செய்தி பரப்பி வந்தனர். தற்போது இதுகுறித்து பேசியுள்ள சானியா மிர்சாவின் தந்தை, "இந்த வதந்திகள் சுத்த முட்டாள்தனமானது.

முகமது ஷமியை திருமணம் செய்யும் சானியா மிர்சா? தந்தை கொடுத்த அப்டேட்! | Sania Mirza Marrying Mohammed Shami Rumour Viral

சானியா மிர்சா இது வரை முகமது ஷமியை நேரில் பார்த்ததே இல்லை" எனக் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சானியா மிர்சா மெக்காவுக்கு புனித யாத்திரை சென்றுள்ளார். அவர் தனது கணவரை பிரிந்த நிலையில் தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.