அஜித் எங்க மருமகனே இல்லை - மனம் திறந்த ஷாலினியின் அப்பா!

Ajith Kumar Shalini
By Sumathi Sep 15, 2023 05:30 PM GMT
Report

நடிகர் அஜித் குறித்து அவரது மாமனார் மனம் திறந்து பேசியுள்ளார்.

அஜித்-ஷாலினி

அமராவதி என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகமானவர் அஜித் குமார். இதுவரை 61 திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

அஜித் எங்க மருமகனே இல்லை - மனம் திறந்த ஷாலினியின் அப்பா! | Shalinis Father Who Opened About Ajith

இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயர் வைக்கப்பட்டு வேலைகளும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரீல் ஜோடியாக இருக்கும் போது கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி நடிகை ஷாலினியை காதலித்து கரம் பிடித்தார்.

இன்னொரு மகன்

இவர்களுக்கு திருமணமாகி 23 வருடங்கள் ஆகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், ஷாலினியின் அப்பா முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

அஜித் எங்க மருமகனே இல்லை - மனம் திறந்த ஷாலினியின் அப்பா! | Shalinis Father Who Opened About Ajith

அதில், அஜித் எப்போதுமே பயங்கர ஸ்பீடு தான். காதலிக்க ஆரம்பித்த உடனேயே அவர் குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வந்து பெண் கேட்டார். உடனே ஜாதக பொருத்தம் எப்படி இருக்கிறது என்று பார்த்தோம்.

அப்போது அவர்கள் இருவருக்கும் 10 பொருத்தமும் பக்காவாக பொருந்தி இருப்பதாக சொன்னார்கள். அவர்கள் சொன்னது உண்மை என்று இப்போது தெரிகிறது. ஏனென்றால் இவர்களைப் போல ஒரு அன்பான ஜோடி எங்கும் கிடையாது.

இந்த திருமணத்தை நிச்சயம் செய்யும்போது எப்படி இரு குடும்பமும் ஒன்றாக பேசி சிரித்து மகிழ்ந்தோமோ அப்படித்தான் இன்று வரை இருக்கிறோம். அஜித் இரண்டு குடும்பத்தையும் அப்படி தாங்குகிறார். அதனால் அவர் எங்களுக்கு மருமகன் கிடையாது. இன்னொரு மகன் எனத் தெரிவித்துள்ளார்.