நடிகையை பெண் கேட்டு சென்ற நடிகர் அஜித் - திட்டி அனுப்பிய நடிகையின் அம்மா..!
நடிகர் அஜித் குமார் ஷாலினியை காதலிக்கும் முன் வேறொரு நடிகையை காதலித்து பெண் கேட்டு சென்றதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகை ஷாலினியை காதலித்து திருமணம்
தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். தற்போது இயக்குநர் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படம் உருவாகி வருகிறது.
அஜீஸ் நடிகை ஷாலினியை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார. அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
திரைப்படங்களில் பிசியாக இருந்து வரும் நடிகர் அஜித் குமார் அவவ்போது பைக் ரைட் சென்று வருகிறார். இது குறித்தான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறது.
பிரபல நடிகையை பெண் கேட்ட அஜித்
ஷாலினியை காதலிப்பதற்கு முன்பு பிரபல நடிகை மீது அஜித்துக்கு காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு வெளியான வான்மதி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சுவாதி.
இந்த நிலையில் அஜித் ஸ்வாதியை திருமணம் செய்து கொள்ள நினைத்து அவரது வீட்டிற்கு பெண் கேட்டு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது ஸ்வாதியின் அம்மா இந்த திருமணத்திற்கு நோ சொல்லி அஜித்தை திட்டி அனுப்பியுள்ளாராம் என்று சினிமா விமர்சகர் பயில்வான் கூறியுள்ளார்.