வைரலான பழைய வீடியோ..இதனால் தற்கொலை எண்ணம் வருகிறது - விரக்தியில் ஜோயா போஸ்ட்!

Sexual harassment Cooku with Comali Kerala Social Media
By Swetha Sep 04, 2024 01:00 PM GMT
Report

ஷாலின் ஜோயாவின் பழைய டிக் டாக் வீடியோவை தற்போது வைரலாகி வருகிறது.

ஜோயா போஸ்ட்

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான 'குக் வித் கோமாளி சீசன் 5' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷாலினி ஜோயா. மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதி இருந்து ஏராளமான பாலியல் குற்றசாட்டுகள் எழுந்த வன்னமே உள்ளது.

வைரலான பழைய வீடியோ..இதனால் தற்கொலை எண்ணம் வருகிறது - விரக்தியில் ஜோயா போஸ்ட்! | Shalin Zoya Expalins About Edavela Babu Tik Tok

இதனால் பெரும் புள்ளிகள் பலரும் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில், கேரள நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேல பாபு மீதும் இந்த குற்றாசாட்டு உள்ளது. அவருடன் குக்கு வித் கோமாளி பிரபலம் ஷாலினி ஜோயா எடுத்த பழைய டிக் டாக் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

இதனால் கொந்தளித்த ஷாலின் ஜோயா தனது சமூக வலைத்தளத்தில் கடும் விரக்தியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நான் என்ன சொல்ல வேண்டும்? பல வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட டிக் டாக் வீடியோ அது. அப்போது இந்த பாடல் வைரலானது.

எதுக்கு புகழ் ஜோயா கன்னத்தை புடிச்சி கிள்ளுறாரு -இனிமே அப்படி பண்ண!! டென்சனான TTF வாசன்

எதுக்கு புகழ் ஜோயா கன்னத்தை புடிச்சி கிள்ளுறாரு -இனிமே அப்படி பண்ண!! டென்சனான TTF வாசன்

பழைய வீடியோ..

பிறகு பாபுவை வைத்து பாடலின் பெயரை வைத்து வீடியோ எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து செய்தேன். இப்படி பட்ட ஒரு மோசமான சமயத்தில் அந்த வீடியோவை ட்ரெண்டிங் செய்து அதன் மூலம் என்னை மோசமான பெண்ணாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

வைரலான பழைய வீடியோ..இதனால் தற்கொலை எண்ணம் வருகிறது - விரக்தியில் ஜோயா போஸ்ட்! | Shalin Zoya Expalins About Edavela Babu Tik Tok

இதில் நான் என்ன செய்ய முடியும்? நீங்களே சொல்லுங்கள். இதற்கு நான் விளக்கம் கொடுத்தால் அதை வேறு விதமாக மாற்றி அதை வைத்த சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

சைபர் உலகம் கொடூரமானது. பெயர் இல்லாத இவர்களை நான் வெறுக்கிறேன் என ஷாலின் ஜோயா விளக்கம் கொடுத்து இருந்தார். அவரது இந்த விளக்கத்திற்கு பலரும் கமெண்ட் மூலம் ஆறுதல் கூறி வந்தாலும் அதற்கும் ஜோயா மனம் வருந்தி பதிவிட்டு இருந்தார்.   

(தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.)