நல்ல அப்பா இல்ல; உங்க கடைசி பொண்ணு.. - ஷகிலாவின் பேச்சால் கடுப்பான பயில்வான்!

Tamil Cinema Shakeela Tamil TV Shows Tamil Actors Tamil Actress
By Jiyath May 01, 2024 03:56 PM GMT
Report

நடிகர் பயில்வான் ரங்கநாதன் மற்றும் ஷகிலா கலந்து கொண்ட நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

பயில்வான் -  ஷகிலா

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'வாழ்ந்து காட்டுவோம்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகை குயிலி நடுவராக அமர்ந்து தொகுத்து வழங்குகிறார்.

நல்ல அப்பா இல்ல; உங்க கடைசி பொண்ணு.. - ஷகிலாவின் பேச்சால் கடுப்பான பயில்வான்! | Shakila And Bailwan Ranganathan Fight In Show

இந்த நிகழ்ச்சியில் யூடியூப் சேனல்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மற்றும் நடிகை ஷகிலா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதுதொடர்பான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் பயில்வான் ரங்கநாதன் "ஷகிலா வந்து இதற்கு முன்பு என்ன மாதிரி எல்லாம் நடிச்சது.. இப்போ அது பஞ்சாயத்து பண்ணுது என்று கேட்கிறார்கள்" என்கிறார்.

விருப்பமே இல்லாத ஜோதிகா; கட்டாயப்படுத்திய சூர்யா - போட்டுடைத்த பிரபலம்!

விருப்பமே இல்லாத ஜோதிகா; கட்டாயப்படுத்திய சூர்யா - போட்டுடைத்த பிரபலம்!

நாக்கு அழுகிடும்

அப்போது ஷகிலா ""என் வயித்து பொழப்புக்காக காட்டுறோங்க" என்று சொல்கிறார். அதற்கு பயில்வான் "அது போல தான் நானும் என் வயித்து பொழப்புக்காக பேசுறேன்" என்று சொல்ல, நடுவர் குயிலி, "வயித்து பொழப்புக்காக என்ன வேணாலும் பேசலாமா? என்பதுதான் எங்களுடைய கேள்வி" என்று கூறுகிறார்.

நல்ல அப்பா இல்ல; உங்க கடைசி பொண்ணு.. - ஷகிலாவின் பேச்சால் கடுப்பான பயில்வான்! | Shakila And Bailwan Ranganathan Fight In Show

அதற்கு பயில்வான் "என்ன வேணாலும் காட்டலாமா? என்பதுதான் என்னுடைய கேள்வி" என்கிறார். அப்போது ஷகிலா "இவரு ஒரு நல்ல அப்பாவா கூட இருக்க மாட்டேங்கிறாரு. "நான் ஒன்னு சொல்லட்டுங்களா? உங்க கடைசி பொண்ணு பத்தி நீங்க சொல்லுங்க..

அவங்க யாரை லவ் பண்றாங்க?என்று கேட்க, கடுப்பான பயில்வான் "நாக்கு அழுகிடும்" என்று கை நீட்டி பேசுகிறார். இந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.