விருப்பமே இல்லாத ஜோதிகா; கட்டாயப்படுத்திய சூர்யா - போட்டுடைத்த பிரபலம்!
நடிகை ஜோதிகா குறித்து ஸ்ரீகாந்த் படத்தின் இயக்குநர் பேசியுள்ளார்
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' என்ற படத்தில் நடிகை ஜோதிகாவுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இதனையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை ஜோதிகா தற்போது 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
விருப்பமே இல்லை
இந்நிலையில் ஜோதிகா குறித்து அந்த படத்தின் இயக்குநர் துஷார் ஹிராநந்தினி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது "ஜோதிகா மிகச்சிறந்த நடிகை. ஸ்ரீகாந்த் படத்தில் நடிப்பதற்கு அவருக்கு முதலில் விருப்பமே இல்லை.

 ஆனால் சூர்யா இந்த படத்தின் ஸ்க்ரிப்ட்டை படித்த பிறகு ஜோதிகாவிடம், இந்த படத்தில் நீ நடித்தே ஆக வேண்டும் என்று கூறினார். அதன் பின்னர்தான் ஜோதிகா ஸ்ரீகாந்த் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார்" என்று தெரிவித்துள்ளார்.  
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    