எங்கள பத்தி பேசுறீங்க - உங்க பொண்ணே ஒரு பொண்ண தான் லவ் பண்றாங்க ! அசிங்கப்படுத்திய ஷகீலா
பயில்வான் ரங்கநாதனை கடுமையாக சாடி பேசி உள்ளார் நடிகை ஷகீலா.
பயில்வான்
நடிகரான பரிட்சயமான பயில்வான் ரங்கநாதன், அண்மையில் தொடர்ந்து நடிகர் - நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை குறித்து தொடர்ந்து பேசி பெரும் ட்ரெண்ட்டாகி வருகின்றார்.
அவரை பலரும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதனை நிறுத்தாமல் நியாயப்படுத்தி பேசி வருகின்றார் பயில்வான். அவர் மீது சில புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியின் டிவி நிகழ்ச்சி ஒன்றில் அவரை நேருக்கு நேராக உட்கார வைத்து நடிகை ஷகீலா கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
ஷகீலா பேசும் போது, நாங்க எந்த ட்ரெஸ் போட்டுட்டு வந்த பிரச்சனை, நாங்க யாரு கூட இருக்கான்'னு பிரச்சனை, ஒரு ஆடியோ லான்ச்'க்கு எப்படி ட்ரெஸ் போட்டு வருவதுல உங்க என்ன பிரச்சனை. உங்க வயித்து பொழப்புக்கு என்னவெல்லாம் பேசுவீங்களா? என ஷகிலா பேச, அத பத்தி பேசுறது எங்களோட இஷ்டம் என பயில்வான் பதிலளித்தார்.
உங்க பொண்ண
40% உண்மையை, 60% பொய்யை சேர்த்து தொடர்ந்து இவ்வாறு சேர்த்து பேசி கொண்டே தான் நீங்கள் இருப்பீர்கள். இப்படி பண்றதுக்கு பதிலா சமூகத்துக்கு எதாவது பண்ணலாமே. உங்க கடைசி பொண்ண பத்தி நா சொல்வா? அவுங்க ஒரு பொண்ண லவ் பண்றாங்க. உடனே பயில்வான் ஷகிலாவிடம் உங்க நாக்கு அழிகிடும் என கூற, எனக்கு அழுகாது என கூறினார்.
தொடர்ந்து ஷகீலா பேச, ஆவேசமான பயில்வான் பொண்ண பத்தி இப்படி பேசுறீங்களே என கூற, உங்க வீட்டை மட்டுமே பேசினால் எப்படி வலிக்குதோ நடிகைகளை பற்றி பேசும் போது அவுங்க அம்மாக்கும் இப்படி தான நினைப்பாங்க என்றார் ஷகீலா.