மகளை டேட் பண்ணனுமா? 7 ரூல்ஸ் போட்ட ஷாருக்கான் - என்னெல்லாம் தெரியுமா?

Shah Rukh Khan Bollywood
By Sumathi May 23, 2024 05:30 PM GMT
Report

மகளை காதலிக்கும் நபருக்கு ஷாருக்கான் 7 ரூல்ஸ் போட்டிருக்கிறார்.

ஷாருக்கான்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான்(24). இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

மகளை டேட் பண்ணனுமா? 7 ரூல்ஸ் போட்ட ஷாருக்கான் - என்னெல்லாம் தெரியுமா? | Shahrukh Khan Rules For The Person Date Suhana

ஷாருக்கான் அடுத்ததாக கிங் என்ற படத்தில் நடிக்க உள்ளார். சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இதில் மகள் சுஹானா கான் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது.

இந்நிலையில் தன் மகளை டேட் செய்ய விரும்பும் பையனுக்கு ஷாருக்கான் ரூல்ஸ் போட்டுள்ளார். முன்னதாக இதுகுறித்த பேட்டி ஒன்றில், என் மகளின் வருங்கால காதலருக்கு நான் 7 விதிமுறைகள் வைத்திருக்கிறேன்.

பிரேக் அப்; ஷாரூக் கான் மகள் சுஹானா கான் சொன்ன தகவல்!

பிரேக் அப்; ஷாரூக் கான் மகள் சுஹானா கான் சொன்ன தகவல்!

மகளின் காதல்

1, வேலை இருக்கணும். 2, உன்னை எனக்கு பிடிக்காது என்பதை புரிந்துகொள். 3, நான் எல்லா இடத்திலும் இருப்பேன். 4, ஒரு வக்கீல் வைத்துக் கொள். 5, சுஹானா என் ப்ரின்சஸ். 6, நான் ஜெயிலுக்கு திரும்பிச் செல்ல தயங்க மாட்டேன். 7, நீ சுஹானாவுக்கு என்ன செய்தாலும் அதை நான் உனக்கு செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

மகளை டேட் பண்ணனுமா? 7 ரூல்ஸ் போட்ட ஷாருக்கான் - என்னெல்லாம் தெரியுமா? | Shahrukh Khan Rules For The Person Date Suhana

மேலும், அதன்பின் மகள் வாழ்வில் காதல் வந்தால் ரூல்ஸ் போடாமல் ஏற்க வேண்டியிருக்கும் என்பதை புரிந்து கொண்டதாவும் தெரிவித்துள்ளார். தற்போது, சுஹானாவும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தாவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.