அம்பானி திருமணத்தில் வெடித்த சர்ச்சை - ராம் சரணை அவமதித்த கான்..? வெளியேறிய கலைஞர்கள்
அம்பானி திருமணம் கொண்டாட்டம் தான் தற்போது நாட்டின் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
அம்பானி திருமணம்
உலக பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்து முடித்துள்ளது.திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத்தின் ஜாம் நகரில் கலைக்கட்டியுள்ளது.
நாட்டின் மிக முக்கிய பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டு வருகிறார்கள்.
நாட்டின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த சம்பவத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு காரணமும் பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான் தான் என்ற தகவலும் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அவமதித்த கான்..?
அதாவது, மேடையில் நடனமாட ராம் சரணை ஷாரூக்கான் அழைக்கும் போது, தென்னிந்தியர்களை கேலிசெய்யும் வகையில், ராம் சரணை "இட்லி" என குறிப்பிட்டு நகைச்சுவையாக அழைத்தார். இது தான் தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோவை பிங்க்வில்லா ஊடகம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது. இந்த வீடியோவை கண்டா ராம் சரணின் ஒப்பனைக் கலைஞரான ஜெபா ஹசன், "நான் ஒரு பெரிய ஷாருக்கான் ரசிகன், ஆனால் அவர் ராம் சரணை மேடையில் அழைத்த விதம் எனக்கு மிகவும் பிடிக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் மட்டுமின்றி, ராம் சரணுக்கு இதில் ஆதரவாக பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை ஷாரூக் கானுக்கு எதிராக பகிர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே, வடஇந்தியாவில் தொடர்ந்து தென்னிந்திய கலைஞர்கள் அவமதிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், மீண்டும் அந்த விவகாரத்தில் எண்ணையை ஊற்றியதை போல, ஷாரூக் கான் பேசியது அமைந்திருப்பதாக பலரும் பேச துவங்கிவிட்டனர்.
ஷாரூக் கான் பேசியதன் தமிழாக்கம் வருமாறு,
"'பெண்ட் இட்லி வடா ராம் சரண் கஹான் ஹை து" - அதாவது, தென்னிந்திய தின்பண்டங்களின் பெயர்கள் இட்லி, வடை, ராம் சரண் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்???