அப்ரிடியின் மகளை கரம்பிடித்த பாகிஸ்தான் இளம் நட்சத்திர வீரர்

Cricket Marriage Pakistan national cricket team
By Sumathi Feb 04, 2023 07:36 AM GMT
Report

முன்னாள் வீரர் அப்ரிடி மகளை பாகிஸ்தான் வீரர் ஷாகீன்ஷா திருமணம் செய்துள்ளார்.

 ஷாகீன்ஷா

பாகிஸ்தான் அணியின் மிரட்டும் வேகப்பந்துவீச்சாளராக வலம் வருபவர் ஷாகின் ஆப்ரிடி. இவர் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் சையது ஆப்ரிடியி மகளை ஷாகின் ஆப்ரிடி காதலிப்பதாக தகவல் வெளியானது.

அப்ரிடியின் மகளை கரம்பிடித்த பாகிஸ்தான் இளம் நட்சத்திர வீரர் | Shaheen Afridi Married To Shahid Afridis Daughter

அதனைத் தொடர்ந்து, சகீத் அப்ரிடியின் மகள் அன்ஷாவுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஷாகீன்ஷா-அன்ஷா திருமணம் கராச்சியில் நடைபெற்றது.

திருமணம்

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சர்பிராஸ் அகமது, நசீம் ஷா, சதாப்கான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், பிரபல ஸ்குவாஸ் வீரர் ஜஹாங்கீர்கான் உள்பட பலர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதுதொடர்பான வீடியோக்கள், புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

அப்ரிடியின் மகளை கரம்பிடித்த பாகிஸ்தான் இளம் நட்சத்திர வீரர் | Shaheen Afridi Married To Shahid Afridis Daughter

ஷாகீன்ஷா அப்ரிடி 25 டெஸ்டில் விளையாடி 99 விக்கெட்டும், 32 ஒருநாள் போட்டியில் 62 விக்கெட்டும், 47 இருபது ஓவர் ஆட்டத்தில் 58 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 3 வடிவிலான போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.