இனி ஷாருக்கான் சென்னையில்தான்.. இதான் காரணமா?
ஜவான் படத்தின் ஷூட்டிங் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜவான்
இயக்குனர் அட்லி, பிகில் திரைப்படத்திற்குப் பிறகு பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஜவானில் பணியாற்றுகிறார். இந்த படத்தில் ஷாருக்கனுக்கு ஜோடியாக நயன்தாரா பாலிவுட்டில் களமிறங்குகிறார்.
அதில், பிரியா மணி, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும், இப்படத்தில், தீபிகா படுகோனே மற்றும் விஜய் கேமியோ ரோலில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே, இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் படப்பிடிப்பு
அடுத்த ஆண்டு வருடம் ஜூன் 2-ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய படமாக இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஜவான் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் நடிகை தீபிகா படுகோனே, ஷாருக்கான் கலந்து கொண்ட நிலையில், படப்பிடிப்புக்காக மும்பையிலிருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
மேலும், மும்பையில் தற்போது கனமழை பெய்து வருவதால் படப்பிடிப்பை சென்னைக்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.