ஷாருக்கானை நிராகரித்த சமந்தா? ஏன் தெரியுமா!

Samantha Shah Rukh Khan Bollywood
By Sumathi Jun 05, 2022 04:13 AM GMT
Report

அட்லி இயக்கி ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடிக்க நடிகை சமந்தா மறுத்ததன் காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜவான்

தந்தை, மகன் என ஷாருக்கான் இரு வேடங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் ஜவான் இந்தி, தமிழ் உள்பட பான் இந்தியா ரிலீஸாக வெளியாகவுள்ளது. அட்லியின் முதல் படமான ராஜா ராணி மற்றும் பிகில் ஆகிய படங்களில் நடித்த நயன்தாராவே இப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

ஷாருக்கானை நிராகரித்த சமந்தா? ஏன் தெரியுமா! | Actress Samantha Rejected To Act In Shah Rukh Khan

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தில் சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி சுனில் க்ரோவர் உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நோ சொன்ன சமந்தா

அதாவது, அட்லி இயக்கிய தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் நடித்த நடிகை சமந்தாவைத்தான் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கவைக்க அட்லி திட்டமிட்டிருந்தாராம். அதன்படி நடிகை சமந்தாவையும் கடந்த 2019ஆம் ஆண்டு படக்குழு அணுகியதாம்.

ஷாருக்கானை நிராகரித்த சமந்தா? ஏன் தெரியுமா! | Actress Samantha Rejected To Act In Shah Rukh Khan

ஆனால், அப்போது நடிகர் நாகசைதன்யாவுடன் திருமண பந்தத்தில் இணைந்திருந்தார் சமந்தா.அந்தக் காலகட்டத்தில் திரைப்படங்களில் நடிப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அவருக்குச் சில சிக்கல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதனால்தான் பெரும் பட்ஜெட் படமான இதில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வந்தபோதும் அவரால் நடிக்க முடியவில்லையென தகவல் கசிந்துள்ளது.