பல ஆண்டுகளாக இருந்த கெட்ட பழக்கத்தை நிறுத்தி விட்டேன் - மனம் திறந்த ஷாருக்கான்

Shah Rukh Khan Actors Bollywood Smoking
By Karthikraja Nov 04, 2024 07:30 AM GMT
Report

பல வருடங்களாக இருந்த கெட்ட பழக்கத்தை நிறுத்தி விட்டதாக ஷாருக்கான் அறிவித்துள்ளார்.

ஷாருக்கான்

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாளின் போது தனது ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். 

ஷாருக்கான்

இந்நிலையில் வழக்கம் போல் அவரது பிறந்த நாளான நவம்பர் 2 ஆம் தேதி மும்பையில் உள்ள ஷாருக்கானின் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் குவிந்தனர். 

அடுத்த படம் விஜய்-ஷாருக்கான் கூட; ஹாலிவுட்டிலிருந்து அழைப்பு வந்தது - இயக்குநர் அட்லீ!

அடுத்த படம் விஜய்-ஷாருக்கான் கூட; ஹாலிவுட்டிலிருந்து அழைப்பு வந்தது - இயக்குநர் அட்லீ!

புகைப்பழக்கம்

அப்போது ரசிகர்களிடம் பேசிய ஷாருக்கான், "ஒரு நல்ல செய்தி இருக்கிறது. நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டேன். புகைபிடிப்பதைக் கைவிட்ட பிறகு மூச்சுத்திணறல் ஏற்படாது என்று நினைத்தேன், ஆனால் அந்த உணர்வு இன்னும் இருக்கிறது. கடவுள் அருளால் அதுவும் சரியாகிவிடும்" கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசிய ஷாருக்கான், ஒரு நாளைக்கு 100 சிகரெட் பிடிப்பதாகவும் நாள் முழுக்க சாப்பிடுவதில்லை, வெறும் பிளாக் காபியை மட்டுமே குடித்து தான் சிக்ஸ் பேக் வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்பிடிப்பதை கைவிட்டுவிட்டதாக ஷாருக்கான் தெரிவித்திருப்பது கண்டு பல ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.