அடுத்த படம் விஜய்-ஷாருக்கான் கூட; ஹாலிவுட்டிலிருந்து அழைப்பு வந்தது - இயக்குநர் அட்லீ!
நடிகர் விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து இயக்குவது குறித்து இயக்குநர் அட்லீ பேசியுள்ளார்.
இயக்குநர் அட்லீ
'ராஜா ராணி' என்ற வெற்றிப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக 3 படங்களையும் நடிகர் விஜய்யை வைத்தே இயக்கினார்.
தற்போது 'ஜவான்' என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக களமிறங்கியுள்ளார் அட்லீ. இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான ஜவான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதிகமான வசூல் வேட்டை நடத்தியது.
இதுவரை உலகம் முழுவதும் ரூ.1,140 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் அட்லீ "என் பிறந்தநாள் விழாவில் ஷாருக்கான் சார், விஜய் சார் சந்தித்தார்கள்.
பேட்டி
அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியாது. ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு ஷாருக்கான் சார் என்னை அழைத்து 'நீ இரண்டு நாயகர்கள் வைத்து படம் எடுப்பதாக இருந்தால் சொல் நாங்கள் நடிக்க தயாராக இருக்கிறோம்' என கூறினார்.
விஜய் சாரும் 'ஆமாபா நாங்க ரெடி' எனக் கூறினார். நான் உண்மையாகவே இந்தப் படத்துக்காக உழைத்து வருகிறேன். ஆனால் இன்னும் இந்தப்படம் உறிதியாகவில்லை. அதற்கான ஸ்க்ரிப்ட் வேலைகள் நடைபெற்று வருகின்றன. நல்ல கதை அமைந்தால் இது நடக்கும். ஜவான் சண்டைப் பயிற்சியாளர் எனது படத்தினை அவர்களது நண்பர்களுக்கு காட்டியுள்ளார்.
அங்கு படம் பார்த்த அவரது நண்பர்களான ஆஸ்கர் விருது பெற்ற பல்வேறு கலைஞர்களுக்கும் ஜவான் பிடித்திருக்கிறது. அதனால் அங்கிருந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியிருக்கிறார்கள். பார்ப்போம்" என்று பேசியுள்ளார்.