ஷாருக்கான்-கத்ரீனா கைப் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு!
நடிகர் ஷாருக்கான், நடிகை கத்ரீனா கைப் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு உறுதி
ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ஜவான் குறித்து அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் நடிகை கத்ரீனா கைப்புக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கரண் ஜோஹரின் பிறந்தநாள்
பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் பிறந்தநாள் பிரமாண்டமான விருந்தில் பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், ஷாருக்கான், கத்ரீனா கைப், கியாரா அத்வானி, ஜான்வி கபூர், மலைகா அரோரா மற்றும் கரீனா கபூர் கான் போன்ற நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், கரண் ஜோஹரின் பிரமாண்ட விருந்தில் விருந்தினர்களாக வந்த 50 முதல் 55 பேருக்கு கொரோனா தொற்று பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனிடையே கொரோனா பரவலின் திடீர் அதிகரிப்பு காரணமாக, திரைப்பட ஸ்டுடியோக்களில் கூட்டமாக இருப்பது மற்றும் அதிக நபர்களுக்கான விருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்றும் பிரஹன் மும்பை முனிசிபல்
கார்ப்பரேஷன் அறிவுறுத்தியுள்ளது.