பாதுகாப்பற்ற முறையில் உறவு; நாட்டை ஆக்கிரமிக்கும் பாலியல் நோய்கள் - திணறும் மக்கள்!
இங்கிலாந்தில் பாலியல் ரீதியாக நோய்கள் அதிகரித்து வருகிறது.
பாலியல் நோய்கள்
UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இங்கிலாந்தில் பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகளின் (STI) எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோனோரியா மற்றும் சிபிலிஸ் வரலாறு காணாத அளவு அதிக அளவு எண்ணிக்கையிலான நபர்களை பாதித்திருப்பதாக கூறுகிறது.

இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது பாதுகாப்பற்ற உடலுறவுதான். 2022-ஆம் ஆண்டில் மட்டுமே 82,592 நபர்கள் கோனோரியாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதிகரிப்பு
கடந்த ஆண்டு 3,92,453 நபர்கள் பாலியல் ரீதியாக பரவும் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயது முதல் 24 வயதிலான இளைஞர்கள் இடையே அதிக அளவு பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

சிபிலிஸ் தொற்று திருநங்கை, திருநம்பிகள், பை-செக்ஸுவல் அல்லது ஆணுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் போன்ற அனைவரிடமும் அதிகரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுதல் பாலியல் தொற்றுகளில் இருந்து தப்பிக்க உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.