8 வயதில் அப்பாவால் பாலியல் துன்புறுத்தல் - குஷ்பு பகீர் தகவல்

Sexual harassment Child Abuse Kushboo Crime
By Sumathi Mar 06, 2023 06:30 AM GMT
Report

தந்தையே தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.

 குஷ்பு 

90களில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. 2020ல் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்து பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை பாஜக நிறுத்தியது.

8 வயதில் அப்பாவால் பாலியல் துன்புறுத்தல் - குஷ்பு பகீர் தகவல் | Kushboo Say About Childhood Sexual Abuse By Father

அவர் தேர்தலில் திமுக வேட்பாளர் எழிலனிடம் 32,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல்

அதில், என் தந்தை என் அம்மாவை அடிப்பார். ஆணோ, பெண்ணோ, ஒரு குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதால் அந்த தாக்கம் அக்குழந்தையை வாழ்க்கை முழுவதும் அச்சமூட்டும். மனைவியை அடிப்பது, பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்றவற்றையெல்லாம் ஆண்கள் சிலர் பிறப்புரிமையாக நினைத்திருக்கலாம்.

நான் என்னுடைய 8 வயதில் என் தந்தையால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அவருக்கு எதிராக பேச எனக்கு 15 வயதில்தான் தைரியம் வந்தது. ஆனால் இதையெல்லாம் சொன்னால் என் அம்மா நம்புவாரா என்ற சந்தேகம் இருந்தது.

ஏனென்றால் எது நடந்தாலும் கணவனவே கண்கண்ட தெய்வம் என்ற மனநிலையில்தான் என் அம்மா இருந்தார். ஆனால் நான் அவருக்கு எதிராக போராடினேன். எனக்கு 16 வயது கூட ஆகவில்லை எங்களை விட்டு அவர் சென்றுவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.