டீப் ஃபேக் வீடியோக்களை உருவாக்கினால் கிரிமினல் குற்றம் - வருகிறது சட்டத் திருத்தம்!
பாலியல் டீப் ஃபேக் வீடியோக்கள் விவகாரத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
டீப் ஃபேக் வீடியோ
செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை பயன்படுத்தி, டீப் ஃபேக் பெயரில் போலியான பாலியல் புகைப்படம் மற்றும் வீடியோக்களை உருவாக்கும் செயல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து இதற்கான புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஒருவரின் அனுமதியின்றி அவரது டீப் ஃபேக்குகளை உருவாக்குவது மற்றும் பகிர்வதை கிரிமினல் குற்றமாக கருதப்படுகிறது.
டீஃபேக் படங்களை உருவாக்குவோர் அதனை பகிராவிடிலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். டீப் ஃபேக் பகிர்வு உறுதி செய்யப்பட்டால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
கிரிமினல் குற்றம்
"டீப் ஃபேக்கின் நோக்கம் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவமானம் அல்லது துன்பத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. எனவே அவை கடுமையாகக் கையாளப்பட வேண்டும் என்பதை புதிய சட்டத் திருத்தம் நோக்கமாக கொண்டுள்ளது" என்று இங்கிலாந்து அமைச்சரான லாரா ஃபாரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் அதிகம் பார்வையிடப்பட்ட ஐந்து டீப்ஃபேக் வலைத்தளங்களின் பகுப்பாய்வில், இந்த இணையதளங்கள் கிட்டத்தட்ட 4000 பிரபலமான நபர்களின் ஆபாச டீப் ஃபேக்குகளைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.