சச்சின் மகளின் Deep Fake புகைப்படம் இணையத்தில் வைரல் - சாரா டெண்டுல்கர் வேதனை!

Sachin Tendulkar Cricket India
By Jiyath Nov 23, 2023 06:01 AM GMT
Report

தனது Deep Fake புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து சாரா டெண்டுல்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Deep Fake வீடியோ

சமீபத்தில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோல் ஆகியோரின் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட Deep Fake வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சச்சின் மகளின் Deep Fake புகைப்படம் இணையத்தில் வைரல் - சாரா டெண்டுல்கர் வேதனை! | Sara Tendulkar About Her Deep Fake Photos

இந்த வீடியோக்கள் AI தொழிநுட்பம் மூலம் உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இதுபோன்று போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் 'சச்சின் டெண்டுல்கரின்' மகளான சாரா டெண்டுல்கரின் Deep Fake புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சாரா, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள செய்தியில் "சமூக வலைதளங்கள் நமது வாழ்க்கையின் இன்பங்கள், துன்பங்கள், அன்றாட நடவடிக்கைகளை கூறுவதற்கும், பதிவிடுவதற்குமான சிறந்த தளமாக உள்ளது.

Deepfake: ராஷ்மிகா, கத்ரீனாவை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் போலி ஆபாச வீடியோ!

Deepfake: ராஷ்மிகா, கத்ரீனாவை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் போலி ஆபாச வீடியோ!

சாரா டெண்டுல்கர்

ஆனால் அற்புதமான சமூக தளங்களை சிலர் பொய்களை பரப்புவதற்காக பயன்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது. அது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. சமூக வலைதளங்களில் எனது டீப் ஃபேக் புகைப்படங்கள் இருப்பதை பார்க்க முடிந்தது.

சச்சின் மகளின் Deep Fake புகைப்படம் இணையத்தில் வைரல் - சாரா டெண்டுல்கர் வேதனை! | Sara Tendulkar About Her Deep Fake Photos

எக்ஸ் தளத்தில் எனது பெயரில் போலியான கணக்குகள் இயங்கி வருவதை பார்க்க முடிந்தது. அந்த கணக்கிலேயே அது பொய்யான கணக்கு என்று கூறப்பட்டிருந்தாலும் கூட, அந்த கணக்கில் பதிவிடப்படும் புகைப்படங்கள் என்னை போல் ஆள்மாறாட்டம் செய்து மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் அமைந்துள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு எக்ஸ் தளத்தில் எந்த கணக்கும் இல்லை.

இதனால் எக்ஸ் நிர்வாகம், சம்மந்தப்பட்ட கணக்குகளை அறிந்து, விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சாரா டெண்டுல்கரின் பெயரில் ப்ளூ டிக்குடன் செயல்பட்டு வந்த கணக்குகள் அகற்றப்பட்டுள்ளார்.