Deepfake: ராஷ்மிகா, கத்ரீனாவை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் போலி ஆபாச வீடியோ!

Rashmika Mandanna Bollywood Katrina Kaif Kajol Actress
By Jiyath Nov 17, 2023 11:27 AM GMT
Report

ராஷ்மிகா, கத்ரீனாவை தொடர்ந்து தற்போது நடிகை கஜோலின் Deep fake Video ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Deep fake Video

AI தொழில் நுட்பம் மனிதர்களின் வேலைகளை எளிமைப்படுத்தி உதவியாக இருந்தாலும், அதன் வளர்ச்சி இப்போது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. உண்மை எது, போலி எது, என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு AI அபாயகரமாக உள்ளது.

Deepfake: ராஷ்மிகா, கத்ரீனாவை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் போலி ஆபாச வீடியோ! | After Rashmika And Katrina Kaif Kajols Deepfake

அந்தவகையில், சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 'Deepfake Video' ஒன்று வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ராஷ்மிகா ஆபாசமான உடையில் லிஃப்ட்டிலிருந்து வெளியே வருவது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது.

இந்த வீடியோ AI தொழில் நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் நடிகை ராஷ்மிகா மனமுடைந்து போனார். பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க, அதேபோல தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃபின் போலியான வீடியோவும் வைரலானது.

நடிகை கஜோல்

இதுதொடர்பாக டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து வீடியோக்களின் 'URL'-லை கண்டுபிடித்து நீக்குவதற்காக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகை கஜோலின் வீடியோவும் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Deepfake: ராஷ்மிகா, கத்ரீனாவை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் போலி ஆபாச வீடியோ! | After Rashmika And Katrina Kaif Kajols Deepfake

அந்த வீடியோவில் நடிகை கஜோல் தயாராகி வெளியே கிளம்புவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் கட்டுப்பாடின்றி வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை, அரசு விரைவில் சட்டவிதிகளுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், இதுபோல் வீடியோக்களை உருவாக்கும் குற்றவாளிகளுக்கு உரியத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.