இளைஞருக்கு பாலியல் வன்கொடுமை - கடனால் கும்பல் வெறிச்செயல்!
கடனை செலுத்த தாமதமானதால் இளைஞருக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
ஹரியானவைச் சேர்ந்தவர் 30 வயது இளைஞர், இவர் இரவு தன் நண்பர்ளுடன் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென வந்த 5 பேர் அந்த இளைஞரை ஒரு காரில் இழுத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து அவரை தாக்கி மது அருந்த வைத்து 5 பேரும், போதையில் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கின்றனர். பின்னர், அந்த இளைஞரிடமிருந்த பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்ட அந்தக் கும்பல்,
பகீர்
அவரை குருகிராம் மருத்துவமனைக்கு அருகில் இறக்கிவிட்டு தப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், மருத்துவமனை ஊழியர் அளித்த புகாரின்பேரில் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது.
அப்போது, ``நானும் அந்த 5 பேரும் கார் ஓட்டுநர்கள். அவர்களில் ஒருவரிடம் நான் ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். அதைத் தர தாமதமானதால், எனது காரை திருடிவிட்டு, என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள்" எனத் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.