சிறுமியை சீரழித்த சாமியார்.. கொடூர தாய் உடந்தை - பகீர் சம்பவம்!

Tamil nadu Sexual harassment POCSO Child Abuse
By Sumathi Nov 25, 2022 05:17 AM GMT
Report

பணக்காரியாக வேண்டும் என்ற ஆசையில் தனது பிள்ளைகளை தாய் கொடுமைபடுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

சிவகங்கை, காரைக்குடியைச் சேர்ந்தவர் ரேனுகாதேவி. இவருக்கும் ஓடைக்கால் கிராமத்தைச் சேர்ந்தவருக்கும் 13 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 11 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர்.

சிறுமியை சீரழித்த சாமியார்.. கொடூர தாய் உடந்தை - பகீர் சம்பவம்! | Sexual Harrassment Samiyar Arrested In Sivagangai

கணவர் சென்னையில் டாஸ்மார்க்கில் வெலை செய்து வருகிறார். இந்நிலையில், மனைவிக்கு பணம் போதாமையால், பணக்காரியாக வாழ வேண்டும் எனத் தோன்றியுள்ளது. இதனால், சித்தர் பீடத்தில் உள்ள ராமகிருஷ்ணன் என்ற சாமியாரிடம் பரிகாரம் பெற்றால் கோடீஸ்வரி ஆகலாம் என்று ஊரில் உள்ள பெண் ஒருவர் கூற ரேனுகாவும் சென்றுள்ளார்.

சாமியாரும், தாயும்.,

அங்கு சாமியார் பரிகாரம் செய்ய வேண்டும் என கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், பணக்காரி ஆகவேண்டும் என்றால் எனக் கூறி அவரது மகனையும் மகளையும் தகாத உறவில் ஈடுபட வைத்துள்ளார்.

இதனை அறிந்த சிறுமியின் பாட்டி அதிர்ச்சியடைந்து, ரேனுகாவின் கணவரை வரவழைத்துள்ளார். அதன்பின் சாமியார் மீதும், மனைவி மீதும் புகாரளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில், சாமியார் பல சிறுவர் சிறுமிகளின் வாழ்க்கையை நாசம் செய்தது தெரியவந்தது. அதன்பின் போக்சோவின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.