பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர் பாலியல் தொந்தரவு - அதிர்ச்சி தகவல்கள்?
கேரளாவில் பெண்கள் கிரிக்கெட் வீரர்கள், சிறார்கள் உட்பட பலருக்கும் பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்து மாநில கிரிக்கெட் சங்கத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாலியல் தொந்தரவு
பயிற்சியாளர் எம். மனு மீது ஆறு சிறுமிகள் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கேரள கிரிக்கெட் சங்கம் கேரளா கிரிக்கெட் லீக்கின் பயிற்சியாளர்களில் ஒருவராக மனுவை நியமிக்கப்பட்ட போது, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மனுவால் பாதிக்கப்பட்டு வேறு மாநிலத்திற்குச் சென்ற பெண் ஒருவர் அவர் மீது போலீஸ் வழக்கு அளித்திருந்த நிலையிலும், அவர் இன்னும் பயிற்சியாளராகப் பணிபுரிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். இம்முறை Kerala Cricket Association போட்டிக்கு சென்ற சிறுமி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
விசாரணை
அப்புகாரை தொடர்ந்து பலரும் மனு மீது புகார் அளிக்க முன்வந்துள்ளார்கள். மனு கடந்த 6 ஆண்டுகளாக சிறுமிகளிடம் தவற நடந்து வருவதாக கூறப்படுகிறது. மனுவுக்கு எதிரான புகார்கள் எழுந்ததையடுத்து, பெண்களுக்கு பயிற்சி அளிக்க மனுவை அனுமதிக்கக்கூடாது என்ற வலியுறுத்தல்களும் அதிகரித்துள்ளது.
மனுவிற்கு ஆதரவாக Kerala Cricket Association செகிரேட்டரி வினோத் நடப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஆனால், அவற்றை முழுவதுமாக மறுத்துள்ளார் வினோத். தொடர்ந்து பேசியவர், மனு ராஜினாமா செய்துவிட்டார் என்றும் ஆனால் தகுதியான மற்ற பயிற்சியாளர்கள் யாரும் இல்லாத காரணத்தாலேயே போட்டிக்கான பயிற்சியாளராக அவரை நியமிக்கும் நிலைக்கு KCA தள்ளப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும், அதற்காகவே காவலர்கள் Kerala Cricket Association வந்து விசாரணை நடத்தியதாகவும் கூறி, gym - toilet என பல இடங்களில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.