சுற்றுலா சென்ற பெண் வக்கீல் ஹோட்டலில் கதறல் - காங்கிரஸ் தலைவர் அத்துமீறல்
சுற்றுலாவுக்கு வந்திருந்த பெண் வழக்கறிஞரிடம் அத்துமீறியதாக மவாட்ட காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துமீறல்
சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜசேகர். சென்னை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் மனைவி மீனாட்சி உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார்.
இருவரும் தனது 2 மகன்கள், உறவினர்களான கயல்விழி, அவரின் 2 பெண் குழந்தைகள் என மொத்தம் 6 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு நாயுடுபுரம் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
கைது
தொடர்ந்து சுற்றிப்பார்த்து விட்டு, மறுநாளும் வெளியே செல்ல திட்டமிட்ட நிலையில், மீனாட்சி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஹோட்டலிலேயே இருந்துள்ளார். கயல்விழி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார்.
இந்நிலையில், மீனாட்சியிடம் ஹோட்டல் உரிமையாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருக்கும் அப்துல்கனி ராஜா தன்னிடம் அத்துமீறியதாக புகாரளிக்கப்பட்டது. ஹோட்டலுக்கு வந்து உதவி செய்வதாகக் கூறி தவறாக நடந்துக்கொண்டதாக கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் போலீஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.