மாமியாரிடம் பாலியல் சீண்டலில் மருமகன் - மனைவி கொடூர தாக்குதல்!

Tamil nadu Attempted Murder Sexual harassment Crime
By Sumathi Mar 17, 2023 06:49 AM GMT
Report

மாமியாரிடம் அத்துமீறியதாக கூறி மனைவி, கணவனை கொலை செய்துள்ளார்.

குடும்ப தகராறு

திருச்சி, திருவெறும்பூர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (27) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி டயானா மேரி (22). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

மாமியாரிடம் பாலியல் சீண்டலில் மருமகன் - மனைவி கொடூர தாக்குதல்! | Wife Killed Husband Chili Boiling Water Trichy

இது தொடர்ந்து வந்ததால் டயானா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரிடம் கோபப்பட்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றார். அவரை உறவினர்கள் சமாதானம் படுத்தியும் அவர் அதை ஏற்கவில்லை. அதனையடுத்து, செல்வராஜ் மனைவியைத் தேடி மாமியார் வீட்டுக்குச் சென்று குடும்ப நடத்த வருமாறு அழைத்தார்.

மனைவி தாக்குதல்

அதற்கு மறுத்த மனைவி மீது ஆத்திரம் அடைந்த அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த டயானா வீட்டில் இருந்த அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரில் மிளகாய் பொடியை கலந்து எடுத்து வந்து அவரது மேல் ஊற்றிவிட்டார். இதில் வலியால் துடித்த அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கிட்னி பாதித்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மனைவி மற்றும் மாமியாரை கைது செய்து விசாரித்ததில் செல்வராஜ், தனது மாமியாருடன் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும், அதனை மனைவி மற்றும் மாமியார் கண்டித்தபோது, தொடர்ந்து அவர் அத்துமீறியதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக கூறப்பட்டுள்ளது.