மனைவியுடன் தகராறு.. தாய், மகளை பாலியல் வன்கொடுமை செய்த கஞ்சா வியாபாரி - பகீர்!

Tamil nadu Sexual harassment POCSO Crime
By Sumathi Dec 05, 2022 05:02 AM GMT
Report

தாய், மகளை கஞ்சா வியாபாரி வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தகராறு

ராணிப்பேட்டை, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கஞ்சா வியாபாரி பகடு பாஸ்கர்(33). இவர் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு துர்கா உள்ளிட்ட நான்கு மனைவிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாஸ்கர் மற்றும் துர்கா மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

மனைவியுடன் தகராறு.. தாய், மகளை பாலியல் வன்கொடுமை செய்த கஞ்சா வியாபாரி - பகீர்! | Sexual Harassment To Mother And Her Daughter

இந்நிலையில், பாஸ்கர் சில மாதங்களுக்கு முன் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். அப்போது, கன்னியாகுமரியைச் சேர்ந்த 40 வயதுள்ள பெண் மற்றும் அவரது மகள்(17) அப்பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவருக்கும், பாஸ்கர் மனைவி துர்காவுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை

தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த கணவரிடம், துர்கா இந்த விவகாரம் குறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் அந்தப் பெண்ணின் வீடு புகுந்து இரவில் அவரையும், மகளையும் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் அதனை வீடியோவாக எடுத்து வைத்து இதனை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். அதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், பாஸ்கர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி துர்கா ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் மீது போக்சோ, கொலை முயற்சி, எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.