மாணவிக்கு பாலியல் தொல்லை - தனியாக அழைத்து சென்று..பள்ளி ஆசிரியை செய்த கொடூரம்!

Coimbatore Sexual harassment Teachers
By Vidhya Senthil Sep 30, 2024 05:05 AM GMT
Report

தனியார்ப் பள்ளி ஆசிரியை ஒருவர் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,

கோவை

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் தனியார்ப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது . இந்த பள்ளியில் உடையார்பாளையத்தைச் சேர்ந்த சவுந்தரியா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

sexual harrasment

மேலும் அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியிடம் நெருங்கிப் பழகி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பள்ளி மாணவியை ஆசிரியை சவுந்தரியா தனியாக வெளியே அழைத்துச் சென்று உள்ளார்.

ஆம்புலன்ஸில் நோயாளி மனைவிக்கு பாலியல் தொல்லை - கணவர் உயிரிழப்பு

ஆம்புலன்ஸில் நோயாளி மனைவிக்கு பாலியல் தொல்லை - கணவர் உயிரிழப்பு

அப்போது அந்த மாணவிக்கு ஆசிரியை சவுந்தரியா பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனக்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்துப் பெற்றோரிடம் கூறி உள்ளார்.

பாலியல் தொல்லை 

அதைக்கேட்ட மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

arrest

அத்தனிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை ஆசிரியை சவுந்தர்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெண் ஆசிரியர் ஒருவரே பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.