15 வயது சிறுமிகளுக்கு பலமுறை பாலியல் வன்கொடுமை - கதறிய பெற்றோர்!
15, 16 வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
அரியலூர் மாவட்டம், மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (40). இவர் தன் வீட்டின் அருகில் உள்ள 15 மற்றும் 16 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் தன் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
14 ஆண்டுகள் சிறை
அதன் அடிப்படையில், போலீஸார் சுப்பிரமணியனை கைது செய்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை விசாரித்து வந்த நீதிபதி ஆனந்தன் இவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.
அதனைத்தொடர்ந்து 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 லட்சம் அபராதமும் விதித்தார். அதனையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டார்.