கன்றுகுட்டிக்கு கொடூரம் - பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடிய இளைஞர்
இளைஞர் ஒருவர் கன்றுகுட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மத்தியப்பிரதேசம், மலைக்காவா கிராமத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்கு ஒரு வீட்டின் பின்புறத்தில் கன்று குட்டி கட்டப்பட்டு இருந்திருக்கிறது. அப்போது இரவில் இளைஞர் ஒருவர் கன்று குட்டியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.
அதில் ன்று குட்டியின் சத்தம் கேட்டு அங்கு வந்த உரிமையாளர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் தப்பி ஓடியுள்ளார். அதன்பின் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
சமீப காலமாக விலங்குகள் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது. அதன்படி, டெல்லியில் பூங்காவிலும், நடுரோட்டிலும் இரண்டு வாலிபர்கள் இரண்டு தெரு நாய்களை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வைரலாகி கடும் கண்டனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.