கடற்கரையோரம் காப்பகம்: பாலியல் தொல்லை - 45 குழந்தைகளுக்கு கொடுமை!
குழந்தை காப்பகத்தில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காப்பகம்
மகாராஷ்டிரா, மும்பை கடற்கரையோர பகுதியில் சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் இயங்கி வந்துள்ளது. இந்த குழந்தைகள் காப்பகம் பெத்தேல் நற்செய்தி தேவாலயத்தால் நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அங்கு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார் எழுந்துள்ளது. அதனையடுத்து, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது.
பாலியல் தொல்லை
விசாரணையில் சட்ட விரோதமாக காப்பகம் நடத்தப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து, காப்பகம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவினை அடுத்து இடிக்கப்பட்டது. மேலும், காப்பகத்தில் இருந்து 45 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.