Tuesday, Jul 15, 2025

6மாத பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை - கொடூர சம்பவம்!

Chennai Sexual harassment POCSO Child Abuse Tiruvannamalai
By Sumathi 3 years ago
Report

நபர் ஒருவர் ஆறு மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரதி. இவர் சென்னையில் நடந்த பொருட்காட்சியில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வந்துள்ளார். அப்போது அங்கு தங்கியிருந்த 6 மாத பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

6மாத பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை - கொடூர சம்பவம்! | Sexual Harassment Of A 6 Month Old Baby

இந்த கொடுமை இருகட்டத்தில் அந்த குழந்தையின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதிர்ச்சி சம்பவம்

அதன் அடிப்படையில், அந்த நபரை கைது செய்து போலீஸார் சென்னை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது நீதிபதி எம்.ராஜலட்சுமி, ஐஸ் கடைக்காரர் பாரதி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதால்

அவருக்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.