பேத்திக்கு பாலியல் வன்கொடுமை - திமுக கவுன்சிலர் கணவர் மீது பகீர் புகார்!

DMK Chennai Sexual harassment Crime
By Sumathi Nov 14, 2022 02:37 PM GMT
Report

தனது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்ததாக திமுக கவுன்சிலரின் கணவர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை

சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி வேளாங்கண்ணி. இவர் தண்டையார்பேட்டை திமுக 53வது வட்டம் கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில், 11ஆம் வகுப்பு படித்துவரும் தனது மகளுக்கு மாமனார் பாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக மருமகன் சார்லஸ் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பேத்திக்கு பாலியல் வன்கொடுமை - திமுக கவுன்சிலர் கணவர் மீது பகீர் புகார்! | Sexual Complaint Against Chennai Dmk Councillor

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சார்லஸ், எனது மாமியார் வேளாங்கண்ணி தண்டையார்பேட்டை திமுக 53வது வட்டம் கவுன்சிலராக உள்ளார். அவரது கணவரான எனது மாமனார் பாண்டியன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பிரியதர்ஷினியிடம் புகார் கொடுத்தேன்.

தந்தை புகார் 

ஆனால், நடவடிக்கை எடுக்காமல் கவுன்சிலரின் கணவன் என்பதால் அலட்சியம் காட்டுகின்றனர். இந்த விவகாரம் குறித்து கேள்வி கேட்டால் பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளி விடுவேன் என்றும் தண்டையார்பேட்டை மகளிர் அணி காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி மிரட்டுகிறார்.

இதனால், புகார் குறித்து மகளிர் காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி மீதும், தனது திமுக கவுன்சிலரின் கணவரான பாண்டியன் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு மனித உரிமை ஆணையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளாக தெரிவித்தார்.