அன்புஜோதி ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை - தப்பித்த இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்
அன்புஜோதி ஆசிரமத்தில் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அன்புஜோதி ஆசிரமம்
விழுப்புரம், குண்டலபுலியூரில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் செயல்பட்டு வந்தது. அங்கு மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் பராமரிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக எழுந்த புகாரில் அண்மையில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வருவது அம்பலமானது. மேலும் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
பாலியல் வன்கொடுமை
அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் எட்டு வகையான 41,009 மனநல மாத்திரைகள் ஆசிரமத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து ஆசிரமத்தில் 4 ஆண்டுகளாக இருந்த பெண்மணி ஒருவர் பகீர் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “கொடுமை தாங்க முடியாமல் 4 ஆண்டுகளில் 2 முறை ஆசிரமத்தில் இருந்து தப்பித்ததாக கூறியுள்ளார். இதற்கிடையில், திருப்பூரை சேர்ந்த ஜபருல்லா என்பவர் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இவரது உடல் பெங்களூரூவில் புதைக்கப்பட்டதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
இதனால், ஆசிரம நிர்வாகிகள் மீது 13 பிரிவுகளில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆசிரம பணியாளர்கள் 6 பேரை கைது செய்துள்ளனர்.