ஹோட்டலில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - உடந்தையாக இருந்த தாய்!
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு அவரது தாய் உடந்தையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
டெல்லி, நியூ அசோக் நகரைச் சேர்ந்தவர் 14வயது சிறுமி. இவர் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது தாயார் டிவி தொடர்பான சில வேலைகளில் இருப்பதாகவும், அடிக்கடி தனது தாயார் இரவில் படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்வார்.
கடந்த ஆண்டு ரக்ஷா பந்தன் விழாவையொட்டி, அவரை ஒரு பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு தனக்குத் தெரிந்த இளைஞரை தனது தாய் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், சிறுமியுடன் அவரது அறையில் தங்கியுள்ளார்.
தாய் உடந்தை
தொடர்ந்து, சிறுமியை இரவில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். எதிர்ப்பு தெரிவித்த போது, அவரது, வாயில் துணியை திணித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை அந்த இளைஞர் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதற்கெல்லாம் சிறுமியின் தாய் உடந்தையாக இருந்துள்ளார். இதுமட்டுமின்றி, புகார் அளித்தாலோ அல்லது தப்பிக்க நில்னைத்தாலோ, கொலை செய்யப்படுவாய் என மிரட்டலும் விடுத்துள்ளனர். ஒருகட்டத்தில் சிறுமி தொல்லை தாங்க முடியாமல் நடந்த சம்பவத்தை தனது தாத்தாவிடம் கூறியுள்ளார்.
அதன்பின் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, அந்த இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.