விளையாட்டுப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் - மது கொடுத்து பாலியல் வன்கொடுமை!
மாணவிகளை விளையாட்டுப் போட்டிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விளையாட்டுப் போட்டி
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பொன்சிங் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 22ம் தேதி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு மாணவிகள் 5 பேரைத் தூத்துக்குடி அழைத்துச் சென்று விடுதியில் ரூம் எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன் ,இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதாகத் தெரிகிறது.
பாலியல் வன்கொடுமை
ஆனால் மாணவிகள் நடந்த சம்பவத்தைப் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு முறையாகப் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.சம்பவத்தை மறைத்ததாகப் பள்ளியின் முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லி, செயலாளர் சையது அகமது ஆசிரியர் பொன்சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.