ரயிலில் டாய்லெட்டுக்குள் பாலியல் டார்ச்சர் - கதறிய இளம்பெண்
Chennai
Sexual harassment
Crime
By Sumathi
ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் தொல்லை
காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அந்த ரயில் சென்னை சென்ட்ரல் நோக்கி விரைந்துள்ளது.
ரயிலில் அந்தப் பெண் கழிவறைக்கு சென்று திரும்பியுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 இளைஞர்கள் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர்.
தீவிர விசாரணை
இதனால் பெண் கூச்சலிட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பெண்ணை கழிவறை உள்ளே தள்ளியுள்ளனர். தொடர்ந்து, அங்கு வைத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
உடனே, இதுகுறித்து புகார் அளித்ததன் பேரில், ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.