பெண்ணின் வாயில் மதுவை ஊற்றி பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் - செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்

Sexual harassment
By Nandhini Jun 28, 2022 12:25 PM GMT
Report

செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், செங்கல்பட்டு ஆத்தூர் பகுதியை சேர்ந்த திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள சரவணன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் பெண் வேறு வேலை தேடி வந்திருக்கிறார். இதனையடுத்து, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அப்பணியில் சேர்வதற்காக செவிலியர் பெண் விண்ணப்பித்துள்ளார். இதற்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக தனது தோழிகளுடன், நேற்று நள்ளிரவு பேருந்தில் செல்ல திட்டமிட்டுள்ளார்.

நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை

இந்த தகவலையும் சரவணனிடம் கூறியுள்ளார். ஆனால், சரவணன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர், தானும் உன்னுடன் வருவதாக செவிலியர் பெண்ணிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, சரவணன் தனது நண்பர்களான சஞ்சய், சூரிய பிரகாஷ் ஆகியோருடன் காரை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.

செவிலியர் பெண்ணை பேருந்தில் பின்தொடர்ந்து சென்று காஞ்சிபுரத்தில், வலுக்கட்டயமாக பெண்ணை காரில் ஏற்றி உள்ளனர். இதனையடுத்து, செவிலியர் பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி வாயில் மதுவை ஊற்றி சரவணனும், அவரது நண்பர்களும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதன் பிறகு, அப்பெண்ணை முட்புதரில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். போதை தெளிந்து வீட்டிற்கு சென்ற பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், மகளிடம் விசாரித்ததில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன் தாயிடம் கூறி அழுதுள்ளாள்.

sexual abuse

போலீசார் நடவடிக்கை

இது குறித்து உடனடியாக செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் காவல்துறையினர், முக்கிய குற்றவாளியான சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.