5ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த ஆசிரியர் - சரமாரியாக வெளுத்து வாங்கிய பொதுமக்கள்
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கோனப்பட்டு அடுத்த வேங்கடத்தான் வட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் விஜயன். அந்தப் பள்ளியில் தற்பொழுது 9 மாணவ-மாணவிகள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.
பாலியல் சீண்டல்
இந்நிலையில், ஆசிரியர் விஜயன் 5ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் கல்வி கற்று கொடுப்பது போல் பாலியல் சீண்டல் செய்துள்ளார். அழுதுக்கொண்டே வீட்டிற்குச் சென்ற சிறுமி, தன் பெற்றோரிடம் ஆசிரியர் விஜயன் இப்படி நடந்து கொண்டார் என்று கூறியுள்ளாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு விரைந்து சென்றனர்.
பள்ளிச் சென்ற பொதுமக்கள் ஆசிரியர் விஜயனை சரமாரியாக தாக்கி தர்ம அடி கொடுத்தனர். இதனையடுத்து, ஆசிரியர் விஜயனை அழைத்துக் கொண்டு, திருப்பத்தூர் கிராமிய காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு
இதன் பின்பு, பொதுமக்கள் ஆசிரியர் விஜயன் மீது துறை சார்ந்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். இத்தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வட்டார கல்வி அலுவலர் மாதேஷ் விரைந்து வந்தார். ஆசிரியர் விஜயன் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்போம் என்று உத்திரவாதம் அளித்த பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.