9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் - போக்சோ சட்டத்தின் கீழ் கைது
நன்னிலம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த தனியார் கால்நடை ஊழியரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே வண்டாம்பாளை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மகன் பிரபு தாஸ் (42). இவர் கால்நடைகளுக்கு தனியார் செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், பணிக்குச் சென்றபோது, 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது
வீட்டிற்கு சென்ற சிறுமி அழுதுகொண்டே பெற்றோரிடம் கூறியுள்ளாள்.
மகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், பிரபுதாஸை கைது செய்த போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.