காபியில் மயக்கபொடி கலந்து சிறுமியை கற்பழித்த இயக்குநர் - உடந்தையாக இருந்த தாய் கைது - பரபரப்பு சம்பவம்
பெற்ற மகளையே தன்னுடைய கள்ளகாதலனுக்கு உல்லாசத்திற்கு அனுமதித்த தாய் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயக்க மருந்து கொடுத்து சிறுமி பலாத்காரம்
தஞ்சாவூரை சேர்ந்தவர் கென்னடி (47). இவர் குறும்பட இயக்குநர். இவர் படப்பிடிப்பிற்காக தேனி வந்துள்ளார். அப்போது, தனது குறும்படத்தில் நடிக்க வைக்க சிறுமிகள் தேவை என்று விளம்பரம் செய்திருந்தார். அதற்காக, ராக்கம்மா என்ற சினிமா ஏஜெண்ட் மூலம் தேனி பகுதியில் 34 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.
இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து, இவர் வீட்டிற்கு கென்னடி அடிக்கடிக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டிற்கு அடிக்கடிக்கு சென்ற கென்னடி, அப்பெண்ணின் 10ம் வகுப்பு படிக்கும் மகள் மீது ஆசைப்பட்டுள்ளார். இதனையடுத்து, சிறுமி குடிக்கும் காபியில் மயக்கபொடி கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கு தாயே உடந்தையாக இருந்துள்ளார். அச்சிறுமியிடம் இந்த விவரம் குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளான் கென்னடி. இதற்கு பயந்து போன சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளாள்.
தாய் கைது
இதனைதொடர்ந்து விடுமுறைக்காக சிறுமி சென்னைக்கு சென்றார்.
அப்போது தனது சித்தியிடம் நடந்தவற்றை அனைத்தையும் கூறி அழுதுள்ளாள் சிறுமி. இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது சித்தி தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரை பதிவு செய்த போலீசார் சிறுமியின் தாயை கைது செய்தனர். இச்செய்தி கேட்டு தலைமறைவான கென்னடியை போலீசார் தேடி வருகின்றனர்.