17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன் - சிறுமி,இளைஞன் தற்கொலை முயற்சி
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள முகந்தனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கர். இவருடைய மகன் அஜய் (20). இவர் 17 வயது சிறுமியை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
சிறுமி கர்ப்பம்
இந்நிலையில், அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார்.இதனால் அந்தச் சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாகியுள்ளார்.
இந்த விஷயம் பெற்றோருக்கும், ஊாருக்கும் தெரிந்து விடும் என்ற பயத்தில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சிறுமி மயங்கி கிடப்பத்தைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த மருத்துவமனையில் அச்சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்கொலை முயற்சி
இதை அறிந்த அஜய்யும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையில் இருந்த இவரை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து 17 வயது சிறுமி நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் இளைஞன் அஜய் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.