10ம் வகுப்பு மாணவனின் உடலை கடித்து அத்துமீறிய காமக் கொடூர வார்டன் - அதிர்ச்சி சம்பவம்
மாணவனிடம் அத்துமீறிய நபர்
நெல்லை பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் சேவியர் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மாணவர் ஒருவர் விடுதியில் தங்கி 10ம் வகுப்பு படித்து வந்தார். அந்த விடுதியில் வார்டனாக வேலை செய்து வந்தவர் ராஜ்குமார்.
இந்நிலையில், ராஜ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்த மாணவனிடம் அத்துமீறி, உடல் முழுக்க கடித்து சித்ரவதை செய்துள்ளார். இதற்கு பயந்து போன அந்த மாணவன் விடுதியிலிருந்து தப்பி வீட்டிற்கு சென்றுவிட்டார். மாணவனின் உடலைப் பார்த்து பாயந்து போன பெற்றோர்கள், மகனிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது, அந்த மாணவன் நடந்ததை கூறியுள்ளான். உடனே, மகனை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர்.
நிர்வாகத்திடம் புகார்
மருத்துவமனையில் அந்த மாணவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அந்த மாணவனின் தந்தை பள்ளி நிர்வாகத்திடம் இது குறித்து புகார் கொடுத்தார். மேலும், காவல்துறையிலும் ஆன்லைன் மூலமாக அந்த மாணவனின் தந்தை புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் வழக்குப் பதிவு
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் உண்மை நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, வார்டன் ராஜ்குமாரை பள்ளி நிர்வாகம் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த வார்டனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.