பள்ளி மாணவனுடன் பாலியல் உறவில் ஆசிரியை - App-ஐ வைத்து ஆப்பு வைத்த மகனின் தாயார்!

United States of America Sexual harassment Crime World
By Jiyath Dec 18, 2023 05:41 AM GMT
Report

பள்ளி மாணவரை தவறாக வழி நடத்தி பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

உயிரியல் ஆசிரியை

அமெரிக்காவின் மெக்லம்பர்க் என்ற பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கேப்ரியேலா (26) என்ற பெண் உயிரியல் (Biology) ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவர் ரக்பி என்ற விளையாட்டிற்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

பள்ளி மாணவனுடன் பாலியல் உறவில் ஆசிரியை - App-ஐ வைத்து ஆப்பு வைத்த மகனின் தாயார்! | Sex With School Student Biology Teacher Arrested

இந்நிலையில் அந்த மாணவன் பயிற்சி வகுப்புகளுக்கு வருவதில்லை என்ற தகவல் அவரது தாயாருக்கு தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதேபோன்று நடந்து வந்த நிலையில், மகன் எங்கு செல்கிறான் என்பதை கண்டுபிடிக்க அவரது தாயார் Life360 என்ற மொபைல் ஆப்பை பயன்படுத்தியுள்ளார். இந்த ஆப் மூலமாக குடும்ப உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விபரங்கள் தெரியவரும்.

தும்மலை அடக்கியதால் நேர்ந்த சோகம்; இப்படி கூடவா நடக்கும்..? மருத்துவர்கள் அதிர்ச்சி!

தும்மலை அடக்கியதால் நேர்ந்த சோகம்; இப்படி கூடவா நடக்கும்..? மருத்துவர்கள் அதிர்ச்சி!

தகாத உறவு 

இதனை பயன்படுத்தி தாயார் கண்காணித்ததில், தனது மகன் அருகேயுள்ள பூங்காவில் காருக்குள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற பார்த்தபோது, தனது மகனும் ஆசிரியை காருக்குள் பாலியல் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை கண்டுபிரித்தார்.

பள்ளி மாணவனுடன் பாலியல் உறவில் ஆசிரியை - App-ஐ வைத்து ஆப்பு வைத்த மகனின் தாயார்! | Sex With School Student Biology Teacher Arrested

இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் தாயார், அந்த காட்சிகளையும், காரையும் தனது செல்போனில் படமாக்கினார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்ததையடுத்து, மாணவரை தவறாக வழி நடத்தி பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆசிரியை கேப்ரியேலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கேப்ரியலாவுக்கும் மாணவனுக்கும் இடையே சில மாதங்களாக தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.