அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி காலமானார்..!
முன்னாள் அமெரிக்க அதிபரான ஜிம்மி கார்டரின் மனைவி ரோஸலின் கார்டர் காலமானார்.
முன்னாள் அதிபர்
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக கடந்த 1977ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டுவரை பதவி வகித்தவர் 'ஜிம்மி கார்டர்' என அழைக்கப்பட்ட ஜேம்ஸ் எர்ல் கார்டர் (99). இவரின் மனைவி ரோஸலின் கார்டர் (96).
கடந்த 1946ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 குழந்தைகளும், 11 பேரக்குழந்தைகளும், 14 கொள்ளுப்பேர குழந்தைகளும் உள்ளனர். தன் கணவரின் பதவிக்காலம் நிறைவடைந்ததும் ரோஸலின் எழுத்தாளராகவும், சமூக மற்றும் பொதுநல தொண்டுகளில் ஆர்வமுடையவராகவும் தன்னை முன்னிறுத்தி வந்தார். மேலும், பெண்கள் உரிமை, மனநலம் உள்ளிட்ட விஷயங்களில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார்.
மனைவி மரணம்
ரோஸலினுக்கு கடந்த மே மாதம் டிமென்சியா நோய் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வயது முதிர்வின் ரோஸலின் கார்டர் காலமானார். தன் மனைவி குறித்து ஜிம்மி கார்டர் உருக்கமாக கூறியுள்ளதாவது "என் சாதனைகள் அனைத்திற்கும் உறுதுணையாக இருந்தவர் ரோஸலின்.
எனக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கி வந்தார். அவர் இருந்த வரையில் என் மீது அன்பு செலுத்த ஒருவர் இருக்கிறார் என நான் அறிந்திருந்தேன்" என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர்களிலேயே நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்து வந்த தம்பதியினர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்கள், ஜிம்மி கார்டரை-ரோஸலின் கார்டர் என்பது குறிப்பிடத்தக்கது.