AC முதல் வகுப்பில் பாலியல் சர்வீஸ் - டிக்கெட்டை பார்த்து அரண்டு போன பயணிகள்!
ஏசி முதல் வகுப்பில் செக்ஸ் சர்வீஸ் என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
ரயில்வே டிக்கெட்
பாகிஸ்தான், காட் அடு நகரில் இருந்து வஹொன் நகரத்திற்கு ரயிலில் பயணி ஒருவர் பயணித்துள்ளார். அதற்காக அவர் டிக்கெட்டை பெற்றுள்ளார். தற்செயலாக டிக்கெட்டை பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதில், ”ஏசி முதல் வகுப்பில் செக்ஸ் சர்வீஸ் வழங்கப்படுகிறது'' என்ற வாசகம் அச்சிடப்பட்டு இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக ரயில்வே டிக்கெட் கவுண்டர் சென்று டிக்கெட்டை காண்பித்து தகவல் கொடுத்து இருக்கிறார்.
செக்ஸ் சர்வீஸ்?
இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் நடத்திய விசாரணையில் டிக்கெட் வழங்கும் மென்பொருள் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அந்நாட்டு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் டிக்கெட்டில் இப்படி வாசகங்கள் அச்சிடப்பட்டு இருப்பது பாகிஸ்தான் ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த டிக்கெட்டின் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.