காதலியின் சம்மதத்தோடு உறவு வைத்தால் குற்றமல்ல - நீதிமன்றம் அதிரடி!
பெண்ணின் முழு ஒப்புதலோடு பாலியல் உறவில் ஈடுபட்டால் குற்றமாகாது என மேகாலயா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலியல் உறவு
மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிறுமி. இவர் அங்கு உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில், அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை ஆசிரியர் அவரது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

அதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை அழைத்து இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போதுதான் சிறுமி காதலிப்பதும், அவருடன் பாலியல் ரீதியான உறவு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பெற்றோர் போலீஸில் புகாரளித்துள்ளனர்.
நீதிமன்றம் அதிரடி
அதன் அடிப்படையில், போலீஸார் காதலனை போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதன்பின் 10 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மேலும், இது தொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில், சிறுமியின் முழு சம்மதத்துடன் உடல் ரீதியான உறவில் இருந்ததாகவும்,
தனது சொந்த விருப்பத்திற்கு உட்பட்டு தான் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், இதுபோன்ற விவகாரத்தில் காதலனும், காதலியும் முழு ஒப்புதலோடும், புரிதலோடும் பாலியல் உறவில் ஈடுபடும்போது போக்சோ சட்டத்தை செயல்படுத்த முடியாது என கூறி சிறுவன் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது.