பிரபல இயக்குனரின் மனைவி தற்கொலை - குழந்தைகள் தவிப்பு!
இயக்குனர் ஓ.என்.ரத்னத்தின் மனைவி தற்கொலை செய்துள்ளார்.
குடும்ப தகராறு
பிரபலமான சீரியல்களான நடிகை ராதிகா சரத்குமார் நடித்த ‘வாணி ராணி’, ‘பாண்டவர் இல்லம்’, ‘பிரியமான தோழி’, ‘செவ்வந்தி’ போன்ற சீரியல்களை இயக்கியவர் இயக்குநர் ஓ.என். ரத்னம்.
இவர் பிரியா என்பவரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது பள்ளி விடுமுறைக்காக மகன்கள் இருவரும் பொள்ளாச்சியில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தனர்.
மனைவி தற்கொலை
இந்நிலையில், சென்னையில் வசித்து வரும் இவர்களுக்கு சொத்து மற்றும் தொழில் தொடங்குவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரத்னம் பிரியாவை அடித்தாகக் கூறப்படுகிறது.
இதனால் மணமுடைந்த மனைவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடனே சம்பவ இடத்திற்கு போலீஸார் உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.